Loading...


jhps-logo

பாடசாலையின்‌ இலட்சிணை


பாடசாலையிணுடைய சின்னமானது கமைமகளின்‌ வடிவத்தைச்‌ சூழ்ந்து யாழ்‌, புத்தகம்‌, சுடர்‌, கொடி என பாடசாலையின்‌ சகல செயற்பாடுகளையும்‌ விதந்துரைக்கும்‌ வகையில்‌ திகழ்கின்றது. வெண்டாமரை மீது நிலை பெற்று நிற்கும்‌ கலைமடந்தை அறிவே சொளுபமானவள்‌. கலைகளை அள்ளித்‌ தரசவன எழுந்து விட்டாள்‌. அவளது பிரபாகத்தைச்‌ சுற்றி அமைந்தவை தான்‌ அவளின்‌ அருட்கடாட்சம்‌. புத்தகமானது கசடறக்‌ கற்கும்‌ வகையை எடுத்துரைக்கின்றது. சுடராணது அருள்‌ ஒளி நோக்கில்‌ அகிலத்தையே காணுங்கள்‌ என்பதைச்‌ செப்புகின்றது. யாழ்‌ ஓசையானது ''இசை'' என்ற உள்ளுணர்வால்‌ மகிழ்ந்து லயப்படுதல்‌ என்பதை எடுத்தியம்புகின்றது. வெற்றுக்‌ கொடியானது நெஞ்சில்‌ உறதியும்‌ விடாமுயற்சியும்‌ தன்னம்பிக்கையுடனும்‌ முயற்சித்தால்‌ வெற்றிக்கணி கிடைக்கும்‌ என்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

மகுட வாசகம்
‌ கற்க கசடறக்‌ கற்பவை கற்றபின்‌ நிற்க அதற்குத்‌ தக" என்ற வள்ளுவர்‌ வாக்கிற்கிணங்க "கற்று ஒழுகு காலம்‌ அழியேல்" என்பது மகுட வாசகம்‌ ஆகும்‌. இதனுடைய கருத்து யாதெனில்‌
"கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்‌ கற்றதன்‌ படி ஒழுக வேண்டும்‌ ஒழுக்கம்‌ உயிரினும்‌ மேலானது நேரம்‌ உயிரைப்‌ போன்றது.